இலங்கை
தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க இதுகுறித்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள வாக்காளர்கள், தங்களது விண்ணப்பங்களை மே மாதம் 4ஆம் திகதிக்கு முன்னதாக மாவட்டத் தேர்தல்கள் காரியாலயங்களுக்கு அனுப்பி வைக்குமாறு அவர் அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே தபால்மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் அன்றைய தினம் அரசாங்க விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.