ஆலையடிவேம்பு MOH காரியாலயத்தினரின் தேசிய டெங்கு ஒழிப்பு வார சிரமதான அழைப்பு…

மழையுடனான காலநிலை ஆரம்பமாக இருப்பதனால் நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவுவதற்காக சாத்தியம் காணப்படுவதாக, சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.எனவே, பொதுமக்களை அவதானத்துடன் இருக்குமாறும் மேலும் டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை துப்புரவு செய்யும் நோக்கில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்பட்டுள்ளது.
தேசிய டெங்கு ஒழிப்பு வாரமாக (14.10.2020 – 20.10.2020) காலப்பகுதியானது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது அதனை முன்னிட்டு ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினர் அக்கரைப்பற்று 7/1 யில் அமைந்துள்ள பெரியபிள்ளையார் ஆலயத்தில் எதிர்வரும் (18.10.2020) ஞாயிற்றுக்கிழமை சிரமதான ஏற்பாடு ஒன்றை
ஒழுங்குபடுத்தியுள்ளனர்.
இந்த டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகளியில் கலந்து கொண்டு ஒத்துழைப்புக்களை வழங்க ஆலையடிவேம்பு பிரதேச சமூகம் சார்ந்த அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கின்றனர்.