கூடுதலான அங்கத்தவர்களுடன் வீடின்றி பரிதவித்த குடும்பம் ஒன்றிற்கு சிவனருள் பவுண்டேசனால் நிர்மாணிக்கப்பட்ட வீடு கையளிக்கும் நிகழ்வு….

சிவனருள் பவுண்டேசன் அமைப்பானது தற்காலிக வீடுகளில் கூடுதலான அங்கத்தவர்களுடன் வீடின்றி பரிதவிக்கும் குடும்பங்களுக்கு வீடமைத்து வழங்கும் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
அந்த வகையில் நேற்றய தினம் (19) வைத்திய கலாநிதி ஜெ.நமசிவாயம் ஐயா அவர்களின் நிதி ஒருங்கிணைப்பின் கீழ் இலண்டனில் வசிக்கும் திரு.ரி.பாலேந்திரா ஐயா அவர்களின் ரூபா மூன்றரை இலட்சம் (Rs.350,000/-) நிதி உதவியில் பெரியநீலாவணை 1 ஏ கிராமத்தில் வசிக்கும் ஆறு பிள்ளைகளைக்கொண்ட ஓர் தாய்க்கு வீடொன்று அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.வே.ஜெகதீசன் ஐயா அவர்கள், இந்து சமய கலாச்சார அபிருத்தி உத்தியோகத்தர் திரு.கே.ஜெயராஜ் , சிவனருள் பவுண்டேசன் செயலாளர் திரு.வே.வாமதேவன், நிர்வாக உத்தியோகத்தர் செல்வி.கே.காஜினி அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.