ஆலையடிவேம்பு
வரலாற்றுச் சிறப்புமிக்க சங்கமன்கண்டி காட்டுப்பிள்ளையார் ஆலயத்தில் ஆலையடிவேம்பு பிரதேச மக்கள், ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றம் , ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பு என்பவற்றினால் மாபெரும் சிரமதானம்.

இலங்கை நாட்டின் இன்றைக்கு 2600 வருடங்கள் பழமை வாய்ந்த இலங்கையின் பூர்விக குடியினரான நாகர் குலத்து “சங்கமன் ” அரசனினால் உருவாக்கப்பட்ட சங்கமன்கண்டி இராச்சியத்துடன் தொடர்வுப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு ஸ்ரீ சங்கமன்கண்டி காட்டுப்பிள்ளையார் ஆலய சுற்றுச்சுழல் பகுதி மாபெரும் சிரமதானம் இன்று (22) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இவ் மாபெரும் சிரமதானம் ஆலையடிவேம்பு பிரதேச மக்கள், ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றம் , ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பு என்பவற்றினால் ஆலயத்தின் உள்வீதி மிகவும் சிறந்த முறையில் துப்பரவு செய்யப்பட்டது.
மேலும் இன்றைய தினம் ஆலையடிவேம்பு பிரதேச அமரர் நல்லையா அவர்களின் ஞாபகார்த்தமாக அவர்களின் குடும்பத்தினரினால் ஆலயத்தில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.