ஆலையடிவேம்பு
கிழக்கு மாகாண விளையாட்டு விழாவின் உடல் கட்டழகு போட்டியில் அக்கரைப்பற்று பிளவின் ஏஞ்சலோ முதலிடம்….

2024 ஆண்டுக்கான கிழக்கு மாகாண விளையாட்டு விழா மட்டக்களப்பில் இடம்பெற்றிருந்த நிலையில் ஆண்களுக்கான உடல் கட்டழகு போட்டி கடந்த (03.06.2024) அன்று இடம்பெற்றது .
இவ் போட்டியில் 47 பேர் கலந்து கொண்டதுடன் இவர்களில் ஆண்களுக்கான உடல் கட்டழகு போட்டி (55-60) கிலோ எடைப்பிரிவில் பங்கு பற்றிய அக்கரைப்பற்று 08 ஆம் பிரிவை சேர்ந்த இருதயநாதன் பிளவின் ஏஞ்சலோ
தங்க பதக்கத்தை வெற்றி கொண்டு தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
தங்கப்பதக்கம் வென்ற உடல் கட்டழகு வீரருக்கு (பிளவின் ஏஞ்சலோ) அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றார்கள்.