கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜஹம்பத் அவர்களின் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலைக்கான திடீர் கள விஜயமும்: வைத்தியசாலையினரின் ஆக்கபூர்வமான முன்மொழிவும்….

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜஹம்பத் அவர்கள் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலைக்கான திடீர் கள விஜயம் மேற்கொண்டு இன்றைய தினம் (24) வெள்ளிக்கிழமை வைத்தியசாலையின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து இருந்தார்.
ஆளுநர் அவர்களின் குறித்த விஜயத்தின் போது பிராந்திய Deputy RDHS Dr. வாஹித் அவர்கள், அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு அதிகாரி Dr.நஷீர் அவர்கள் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் K.ஹரன்ராஜ் அவர்கள் இணைந்து குறித்த வைத்தியசாலையில் இடம்பெறும் செயற்பாடுகளுக்கு மேலதிகமாக வைத்தியசாலையின் ஒரு பகுதியில் உடல் உள புனருத்தாபன விசேட சிகிச்சை நிலையம் ஒன்றை அமைப்பது தொடர்பாக கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜஹம்பத் அம்மணி அவர்களின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான அனுமதியும் பெற்று கொண்டிருந்தார்கள்.
அது மாத்திரம் இல்லாமல் காலதாமதம் இன்றி உரிய வேலைகளை உடனடியாக செயற்படுத்த தேவையான சாத்திய பாடுகளையும் நடைமுறைகளையும் உடனடியாக ஆரம்பிக்கும் படி பிராந்திய Deputy RDHS Dr. வாஹித் அவர்களிடம் கௌரவ ஆளுநர் பணிப்பும் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மிக நீண்ட கால வரலாற்றை கொண்ட அக்கரைபற்று பிரதேச வைத்தியசாலை அமைந்துள்ள பிரதேசத்தின் பிரதேச செயலாளர் திரு வி. பபாகரன் அவர்களும் நேரடி கள விஜயம் மேற்கொண்டு கௌரவ ஆளுநரை சந்திந்து கலந்துரையாடினார்.