ரிஷாட்டின் கணக்காளர் அழகரட்ணம் மனோரஞ்சனுக்கு விளக்கமறியல்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கணக்காளர் அழகரட்ணம் மனோரஞ்சனுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரிஷாட் பதியுதீன் உட்பட மூவரை கைது செய்யுமாறு பிறப்பக்கப்பட்டிருந்த சட்டமா அதிபரின் பணிப்பின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கிருலப்பனை பகுதியில் வைத்து மனோரஞ்சன் இன்று (புதன்கிழமை) கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவர் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ரிஷாட்டை கைது செய்ய தொடர்ந்தும் வலைவீச்சு – கணக்காளர் கைது!
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கணக்காளர் அழகரட்னம் மனோரஞ்சன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரிஷாட் பதியுதீன் உட்பட மூவரை கைது செய்யுமாறு பிறப்பக்கப்பட்டிருந்த சட்டமா அதிபரின் பணிப்பின் பேரில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கிருலப்பனை பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்வதில் இருந்து பாதுகாக்க முற்பட்ட அவரின் பாதுகாப்பு உத்தியோத்தர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இரண்டு கார்களும் துப்பாக்கிகள் இரண்டும் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.