கிழக்கில் தலைமைத்துவம் உருவாக வேண்டும் என சொல்கின்றவர்கள் இன்று வடக்கின் தலைமைத்துவத்தை கொண்ட சூரியன் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட தயராகிவருகின்றனர் முன்னாள் பா.உ கோடீஸ்வரன்…

வி.சுகிதாகுமார்
கிழக்கில் தலைமைத்துவம் உருவாக வேண்டும் என சொல்கின்றவர்கள் இன்று வடக்கின் தலைமைத்துவத்தை கொண்ட சூரியன் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட தயராகிவருகின்றனர் என அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
அக்கரைப்பற்றில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
கிழக்கிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும், கிழக்கில் தலைவர்கள் உருவாக வேண்டும் கிழக்கு தலைமைத்துவ கட்சியில்தான் போட்டியிடவேண்டும் என கூறியவர்கள் இன்று வடக்கு தலைமைத்துவத்தை கொண்ட தமிழர் விடுதலை கூட்டணி சின்னத்தில் போட்டியிட களமிறக்கப்பட்டுள்ளனர்.
தங்களது சுயநலத்திற்காகவும் சுய இலாபத்திற்காகவுமே இவ்வாறு செயற்படும் சிலர் ஏனைய பேரினவாத கட்சிகளின் தூண்டுதலின் அடிப்படையில் வெளிநாட்டு சக்திகளின் துணையோடு வடக்கு வேறு கிழக்கு வேறு எனும் காழ்ப்புணர்ச்சியுடன் செயற்படுகின்றனர் என்றார்.
வடகிழக்கு என்பது சமஷ்டி முறையிலான இணைக்கப்பட்ட ஆட்சியாகத்தான் இருக்கவேண்டும் என்பது எங்களது வேண்டுகோளும் மக்களது வேண்டுகோளும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் அம்பாரை மாவட்ட வேட்பாளர்கள் தொடர்பில் கட்சி தீர்க்கமான முடிவை விரைவில் எடுக்கும் எனவும் கூறினார்.