விளையாட்டு
கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்தார் மென்டிஸ்

இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மென்டிஸ் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
உபாதை காரணமாக கிரிக்கெட் விளையாட்டிலிருந்து அவர் நீண்ட காலமாக விலகியிருந்தார்.
அஜந்த மென்டிஸ், முரளிதரனின் திறமைக்கு மத்தியிலும் தனது தனித்திறமையை சர்வதேச அரங்கில் வெளிப்படுத்தியிருந்தார்.
19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மென்டிஸ் 70 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதுடன், 87 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 152 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
அத்துடன், 39 சர்வதேச இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடியுள்ள மென்டிஸ், 66 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
இறுதியாக கடந்த 2015ஆம் ஆண்டு அவர் சர்வதேச போட்டிகளில் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.