ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண தேசிய பாடசாலையில் இடம்பெற்ற வாணி விழா

வருடம்தோறும் புரட்டாதி மாதம் நவராத்திரி விழா சைவ சமயத்தவர்களால் கொண்டாடப்படுகின்றது முழுவதுமாக ஒன்பது நாட்களை கொண்ட இவ் விழாவானது வீரத்திற்கு துர்க்கை அம்மனையும் , செல்வத்திற்கு லட்ஸு மி அம்மனையும், கல்விக்கு சரஸ்வதி அம்மனையும், குறித்து நிற்கின்றனர். இறுதி மூன்று நாட்களும் வாணி விழாவாக இந்து சமய பாடசாலை மாணவர்களால் ,கொண்டாடப்படுகின்றது.
இதன் அடிப்படையில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண தேசிய பாடசாலையில் வாணி விழாவின் இறுதி நாள் இன்று அம் மாணவர்களால் சிறப்பாக நடந்து முடிந்தது. இதன்போது பூசைகள் இடம்பெற்று சரஸ்வதி அன்னையின் அருட்கடாட்ஷசத்தை அம் மாணவர்கள் பெற்றனர். அத்துடன் இந்துசமய விழுமியபண்புகள் மற்றும் இந்துசமய தொன்மையையும் மேன்மையையும் மாணவர்களுக்கு ஆசிரியரால் போதிக்கப்பட்டது.