காலி மாவட்ட ஸ்ரீ சக்தி ஆன்மீக இந்து சம்மேளனம் ஏற்பாட்டில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பல சமயங்களைச் சேர்ந்தவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு…..

காலி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ சக்தி ஆன்மீக இந்து சம்மேளனம் ஏற்பாட்டில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பல சமயங்களைச் சேர்ந்தவர்களுக்கு கௌரவம் சேர்க்கப்படும் நிகழ்வில் புத்தசாசன மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் ஒருங்கிணைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் காலி மாநகர சபை மற்றும் முன்னாள் பிரதம வேட்பாளர் கலாநிதி சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது குருமார்கள் கௌரவிக்கப்பட்டதோடு முன்னாள் பிரதமரின் இந்த விவகாரங்களுக்கான இணைப்பாளர் கலாநிதி சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா கலந்து சிறப்பித்தார்.
தேசமானிய, அபிமானிய விருதை முன்னாள் பிரதமரின் இந்த விவகாரங்களுக்கான இணைப்பாளர் கலாநிதி சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்களுக்கு புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜே.கே.யதுர்ஷன்.