இலங்கை
காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி மரணம் அடைந்தவரின் குடும்பத்திற்கு திருக்கோவில் பிரதேச செயலாளரினால் இழப்பீட்டுத் தொகை வழங்கி வைப்பு….

கடந்த 2023.01.05 ஆம் திகதி திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரத்தில் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி மரணம் அடைந்த அமரர் புவிதராசன் ரசிகரன் அவர்களின் குடும்பத்திற்கு வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஊடாக அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் இழப்பீட்டு தொகையாகிய ரூபா 1 மில்லியன் தொகையின் முதற்கட்டமாக இன்றைய தினம் ரூபா 100,000/- ரூபா அவரது மனைவியிடம் பிரதேச செயலாளர் திரு.T.கஜேந்திரன் அவர்கள் வழங்கிவைத்தார்.
ஜே.கே.யதுர்ஷன்