கவடாப்பிட்டி மக்களின் குமுறலுக்கு இன்று தீர்வு!!! கோலாகலமாக அறநெறி பாடசாலை திறப்பு விழா….

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கவடாப்பிட்டி கிராமத்தில் 30 மாணவர்கள் அளவில் அறநெறி பாடசாலைக்கு செல்ல ஆர்வம் உள்ள மாணவர்கள் இருக்கின்ற போதிலும் செல்வதற்கு எங்களுக்காக ஒரு அறநெறி பாடசாலை இல்லை என்ற மக்களின் குமுறலுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஆலையடிவேம்புவெப் இணையக்குழுவின் ஏற்பாட்டில் இன்று (15.09.2019) காலை 09.00 மணியவில் அறநெறி பாடசாலை ஆரம்ப நிகழ்வு ஆலையடிவேம்பு இந்துமாமன்ற அமைப்பினர் பங்களிப்புடன் கோலாகலமாக இடம்பெற்றது.
நிகழ்வில் ஆலையடிவேம்பு இந்துமாமன்ற தலைவர் கனகரெட்ணம் ஐயா,ஆலையடிவேம்பு இந்துமாமன்ற செயளார்,பொருளாளர்,உறுப்பினர்கள் மேலும் இந்து கலாசார உத்தியோகத்தகர் திருமதி.சாந்தினி,ஆலையடிவேம்புவெப் இணையக்குழுவின் இயக்குனர், தலைவர், பிரதித்தலைவர், உறுப்பினர்கள்,கவடாப்பிட்டி கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இன் நிகழ்வுகள் சைவசமய நிகழ்வுகளுடன் ஆரம்பிக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து அதிதிகள் உரைகள்,ஆசிரியருக்கான மற்றும் மாணவர்களுக்கான புத்தகங்கள் , அப்பியாச கொப்பிகள் என்பனவும் வழங்கப்பட்டு நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.