இலங்கை
மட்டக்களப்பில் கள்ளத் தராசினைப் பயன்படுத்திய வியாபாரிகள் மீது வழக்கு பதிவு

மட்டக்களப்பில் கள்ளத்தராசினைப் பயன்படுத்தி விவசாயிகளை மோசடி செய்த 8 வியாபாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் தற்போது வேளாணமை அறுவடை இடம்பெற்றுவரும் நிலையில், விவசாயிகளிடம் இருந்து வெளிமாவட்ட வியாபாரிகள் கள்ளத் தராசினைப் பயன்படுத்தி நெல் கொள்வனவில் ஈடுபட்டுவருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனையடுத்து அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட அளவீட்டு திணைக்கள பணிப்பாளர் வி.விக்கினேஸ்வரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே 8 வியாபாரிகள் குறித்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் குறித்த வியாபாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.