இலங்கை
கல்முனை றோட்டரிக் கழகத்தின் 22 ஆவது புதிய தலைவர் பதவியேற்பு!

கல்முனை றோட்டரிக் கழகத்தின் 22 ஆவது தலைவராக, நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் கல்லாறு நிலைய பொறுப்பதிகாரி றோட்டரியன் விஜயரெத்தினம் விஜயசாந்தன் நேற்று (27) பதவிப் பிரமாணம் செய்தார்.
புதிய தலைவர் மற்றும் பணிப்பாளர் சபையினது பதவியேற்பு வைபவம், காரைதீவு லேடி லங்கா மண்டபத்தில் நடைபெற்றது. பிரதம அதிதியாக மாவட்ட றோட்டரி ஆளுநர் றோட்டரியன் புவுது டி சொய்சாயும் கௌரவ அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜனும் கலந்து சிறப்பித்தார்கள்.
கல்முனை றோட்டரிக் கழகத்தின் புதிய செயலாளராக றோட்டரியன் கே.குகதாஸன், புதிய பொருளாளராக றோட்டரியன், எம்.சிவபாத சுந்தரம் ஆகியோரும் பதவியேற்றார்கள்.