ஆலையடிவேம்பு
கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலயத்தின் திருவெம்பாவை திருவாதிரை தீர்த்த உற்சவம்….

இந்துக்கள் அனுஸ்டிக்கும் சிவவிரதங்களுள் ஒன்றான திருவெம்பாவை விரதத்தின் இறுதிநாள் நிகழ்வான திருவாதிரை தீர்த்தோற்சவம் இன்று(20.12.2021) ஆகும்.
ஆலையடிவேம்பு பிரதேச கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலயத்தின் கடந்த ஒன்பது தினங்களாக பாரம்பரியமான இவ் மார்கழி உற்சவம் அதிகாலை திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சியும் மற்றும் மாலை குடித்திருவிழாவாக சிறப்பாக இடம்பெற்று வந்த நிலையில்,
இன்று (20) சிவகாமி சமேத நடராஜமூர்த்தியும் மாணிக்கவாசகர் பெருமானும் பல்லக்கில் திருவாசகம் மங்கல வாத்தியம் சங்கு சிகண்டி பறை முழங்க திருவீதியுலா போந்து வந்து கடற்கரையில் திருவாதிரை தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.
அத்தோடு ஆருத்ரா அபிசேகம் நாட்டியாஞ்சலி ஆருத்ரா தரிசனமும் இன்று அதிகாலை முதல் பக்திபூர்வமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.