ஆலையடிவேம்பு
கருங்கொடித்தீவு குளக்கரையில் பெரிய பிள்ளையாரின் பெருங்கதை ”தீர்த்தம் உற்சவம்” மற்றும் “குருக்கள் அழைப்பு” வைபவமும் சிறப்பான முறையில் இன்று….

அக்கரைப்பற்று பகுதியின் ஆதிக்கோயிலான கருங்கொடித்தீவுறை பெரிய பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் பெருங்கதை விரத நிகழ்வுகள் சிறப்பான முறையில் இடம்பெற்று வந்த நிலையில்.
நேற்றய தினம் (09) மாலை சிறப்பான முறையில் விநாயகர் பெருங்கதை விரத நிகழ்வின் கஜமுகாசூரசம்காரம் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
மேலும் இன்றைய தினம் (09) காலை வேளையில் கருங்கொடித்தீவு குளக்கரையில் பெரிய பிள்ளையாரின் பெருங்கதை உற்சவ தீர்த்தம் சிறப்பாக இடம்பெற்றதுடன்.
பண்டு தொட்டு தொடரும் பாரம்பரிய விழுமியங்களில் ஒன்றாக காணப்படும் “குருக்கள் அழைப்பு” வைபவமும் சிறந்த முறையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வுகள் அனைத்தும் கொரோனா தடுப்பு சுகாதார விதிமுறைகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டு இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.