பனங்காடு பிரதேச வைத்தியசாலைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜீத் பிரமதாச அவர்களினால் 21 லட்சம் ரூபாய் பெறுமதியான வைத்திய பொருட்கள் வழங்கி வைப்பு….

பனங்காடு பிரதேச வைத்தியசாலைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறைமாவட்ட தமிழ் பிரதேச தமிழ் பிரதிநிதிகளின் அமைப்பாளர் வே.வினோகாந் அவர்களின் அழைப்பின் பேரில் வருகை தந்த எதிர்கட்சி தலைவர் சஜீத் பிரமதாச அவர்கள் 21 லட்சம் ரூபாய் பெறுமதியான வைத்திய பொருட்கள் வைத்தியசாலை தலைமை அதிகாரியிடம் எதிர்கட்சி தலைவரினால் வழங்கி வைப்பு.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவின் பிரகாரம் செயற்ப்படுத்தப்படும் “ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து ஓர் மூச்சு”திட்டத்திற்கு இணைவாக ஆரோக்கியமான நாட்டை உருவாக்கும் நோக்கில் ‘ஜன சுவய’ திட்டத்தின் கீழ் “சுவாசம்”எனும் திட்டத்தின் ஊடாக மொத்தமாக 21,34,400.00 ரூபாய் பெறுமதியான ETU bed, Pulse oximeter- 2, Multipera monitor- 2, மருத்துவ உபகரணங்களை தொற்று நீக்கக் கூடிய Autoclave உபகரணம் போன்றன வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் இந் நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் சஜீத் பிரமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சத்தியின் அமைப்பாளர்கள் மதகுருமார்கள் வைத்தியசாலை வைத்தியர் தாதியர் உத்தியோத்தர்கள் பொதுமக்கள் ஆகியோர் இன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய எதிர்கட்சி தலைவர் ஆளும் கட்சி மற்றும் ஜனாதிபதியினால் இவ்வாறான தொரு பின்தங்கிய கிராமங்களில் காணப்படும் வைத்திய சாலைகளுக்கு தேவையான உதவிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தி இவ்வாறானதொரு திட்டத்தினை எதிர்கட்சியாக இருந்து செயற்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
குறித்த வைத்தியசாலை தொடர்பில் தனது அமைப்பாளர் வெ.வினோகாந் அறிவித்திருந்தமையை அடுத்து தாம் குறித்த பனங்காடு வைத்தியசாலையினை தெரிவு செய்து வைத்திய உபகரணங்களை கையளித்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.