இலங்கை
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தடுப்பூசி ஏற்றும் இரண்டாம் கட்டப் பணிகள் நடைபெற்றது.


காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் இரண்டாம் கட்டப் பணிகள் இன்று (29) சுகாதார வைத்திய அதிகாரி தஸ்ஸீமா வசீர் தலைமையில் இடம்பெற்று வருகின்றன.
தடுப்பூசி ஏற்றும் பணியில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,பிரதேச சபை உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
தடுப்பூசி ஏற்றிக் கொள்வதில் பொதுமக்கள் மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.










