ஆலையடிவேம்பு

கமு/திகோ/புனித சவேரியார் வித்தியாலயத்தில் ”e-கல்வி திறன் வகுப்பறை” திறப்பு விழா…

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச கமு/திகோ/புனித சவேரியார் வித்தியாலயத்தில் e-கல்வி திறன் வகுப்பறை திறப்பு விழா இன்றைய தினம் (03) வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் பாடசாலையின் அதிபர் ஶ்ரீ.மணிவண்ணன் அவர்களின் தலைமையில் கோலாகலமாக சிறந்த முறையில் இடம்பெற்றது.

இன் நிகழ்வின் பிரதம அதிதியாக திரு.யோ.ஜெயச்சந்திரன் (வலயக்கல்விப் பணிப்பாளர்- திருக்கோவில்), கௌரவ அதிதியாக திரு.K.கங்காதரன் (கோட்டக் கல்விப் பணிப்பாளர்- ஆலையடிவேம்பு) , சிறப்பு அதிதிகளாக அருட்பணி.அருள்ராஜா (பங்குத் தந்தை, தேவகிராமம்), திரு.வை.யோகராஜா (PSI இணைப்பாளர்), திரு.சா.சுதாகரன் (e-கல்வி தொண்டு நிதியம் இணைப்பாளர் – கிழக்கு மாகாணம்) , மேலும் பல அதிதிகள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பாடசாலையின் e-கல்வி திறன் வகுப்பறை செயத்திட்டத்திற்கு “Melbourne Garlands” நிறுவனத்தினர் கொடையாளர்களாக காணப்படுவதுடன் குறித்த நிகழ்வானது சுகாதார முறைகளுடன் சிறந்த முறையில் இடம்பெற்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker