கமு/திகோ/கலைவாணி கனிஷ்ட வித்தியாலயத்திற்கு ஒரு லட்சம் ரூபா உதவியுடன் மின் இணைப்பு பெறுவதற்கான வேலைத் திட்டங்கள் ‘சத்தியம் வாழும் போதே வழங்கிடுவோம்’ அமைப்பின் ஊடக முன்னெடுப்பு….

ஆலையடிவேம்பு பிரதேச சின்னப்பனங்காடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட புளியம்பத்தைக் கிராமத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கமு/திகோ/கலைவாணி கனிஷ்ட வித்தியாலய பாடசாலைக்கான முழுவதுமாக ஒரு லட்சம் ரூபா (100,000.00/-) நிதி உதவியுடன் மின்சார வேலைகளும், மின் இணைப்பும் பெறுவதற்கான வேலைத் திட்டங்கள் ‘சத்தியம் வாழும் போதே வழங்கிடுவோம்’ அமைப்பின் ஊடக அதன் ஸ்தாபகர் திரு.க.சத்தியமூர்த்தி அவர்களின் ஏற்பாட்டில் நிர்மலன் அவர்களின் இத் திட்டத்திற்கான ஆதரவுடன் ஆரம்பமாகியுள்ளது.
மேலும் ‘சத்தியம் வாழும் போதே வழங்கிடுவோம்’ அமைப்பின் ஊடக கமு/திகோ/ கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்திற்கு நீண்ட நாள் தேவையாக இருந்து வந்த பார்வையாளர் மண்டபத்திற்கான 230000.00 ரூபா பெறுமதியான 150 கதிரைகள் குறித்த பாடசாலைக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டது என்பதுவும் கவனிக்கத்தக்கது.
கமு/திகோ/கலைவாணி கனிஷ்ட வித்தியாலய பாடசாலை அதிபர்.திரு. ஏ.நல்லதம்பி அவர்களின் கோரிக்கைக்கு அமைய குறித்த மின்சார வேலைகளும், மின் இணைப்பும் பெற்றுக்கொடுப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது மேலும் இவற்றின் வைபவரீதியாக கையளிக்கும் நிகழ்வுகள் விரைவில் இடம்பெற இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.