ஆலையடிவேம்பு
கமு/திகோ/கலைவாணி கனிஷ்ட வித்தியாலயத்திற்கு அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசன் அமைப்பின் ஊடக ஒரு தொகை பெறுமதியான கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கி வைப்பு….

ஆலையடிவேம்பு பிரதேச சின்னப்பனங்காடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட புளியம்பத்தைக் கிராமத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கமு/திகோ/கலைவாணி கனிஷ்ட வித்தியாலயத்திற்கான உதவி வழங்கல் நிகழ்வு நேற்றய தினம் (27) அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசன் அமைப்பின் ஊடக அதன் பணிப்பாளர் திரு.வே.வாமதேவன் அவர்களின் தலைமையில் பிரான்சில் வசிக்கும் திரு.திருமதி டேவிட் கஜேந்தினி அவர்களின் திருமண பதிவு நிகழ்வை முன்னிட்டு ஒரு தொகை பெறுமதியான கபட், வைற்போட், கற்றல் கற்பித்தல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர்.திரு. ஏ.நல்லதம்பி அவர்களின் கோரிக்கைக்கு அமைய நடைபெற்ற இவ் உதவி வழங்களில் சமூக சேவை செயற்பாட்டாளர் திரு.க.தயாபரன் அவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.