சுவாரசியம்

கனவில் வந்து தெய்வம் சொன்ன வார்த்தை : கடற்கரை சென்ற ஏழை மீனவனுக்கு கிடைத்த பல கோடி ரூபாய் அதிர்ஷ்டம்!!

தாய்லாந்தில் ஏழை மீனவர் ஒருவர் கடற்கரையில் இருந்த நத்தை ஓட்டை எடுத்த போது, அதன் உள்ளே சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட அரிய வகை ஆரஞ்சு முத்து இருப்பதை கண்டுள்ளார்.

தாய்லாந்தின் Nakhon Si Thammarat மாகாணத்தில் இருக்கும் கடற்கரையில், கடந்த 27-ஆம் திகதி Hatchai Niyomdecha என்ற 37 வயது நபர் தன்னுடைய குடும்பத்தினருடன், கடல் சங்குகளை பிறக்கியுள்ளார். அப்போது, Hatchai Niyomdecha கரையில், கைவிடப்பட்ட மிதவை ஒன்று கிடப்பதைக் கண்டுள்ளார்.

அதை எடுத்து பார்த்த போது, உள்ளே மூன்று நத்தை ஓடுகள் இருந்துள்ளது. இதையடுத்து அவர் அந்த நத்தை ஓடுகளுடன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தன் தந்தையிடம் அதை கொடுத்துள்ளார்.

அதன் பின் அவர் அந்த நத்தை ஓடுகளை சுத்தம் செய்த போது, அதன் உள்ளே Melo என்றழைக்கப்படும் அரிய வகை ஆரஞ்சு முத்து இருந்துள்ளது.
இந்த Melo என்றழைக்கப்படும் அரிய வகை முத்துக்கள் கடல் நத்தைகளால் உருவாகின்றன. ஓடுகளுக்குள் வைக்கப்படுகின்றன.

இது மிகவும் விலையுயர்ந்த முத்து என்பதை அறிந்த அவர்கள் சோதித்து பார்த்துள்ளனர். அதன் எடை சுமார் 7 கிராமிற்கு மேல் இருந்துள்ளது. இது குறித்து Hatchai Niyomdecha கூறுகையில், சில நாட்களுக்கு முன்பு தான் ஒரு விசித்திர கனவு கண்டேன்.

அதில், நீண்ட மீசையுடன் வெள்ளை நிறத்தில் இருக்கும் ஒரு முதியவர் என்னை கடற்கரைக்கு வரச் சொன்னார், அதனால் நான் பரிசைப் பெற முடியும் என்று அவர் கூறினார்.

நான் இந்த முத்துவை மிக உயர்ந்த விலைக்கு விற்க விரும்புகிறேன். பணம் என் வாழ்க்கையை மாற்றாது, அது என் விதியை மாற்றிவிடும். எனது முழு குடும்பப சிறந்த வாழ்க்கையை பெறும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

மேலும் இந்த முத்துவின் மதிப்பு 250,000 பவுண்ட்(இலங்கை மதிப்பில் 6,61,51,147 கோடி ரூபாய்) இருக்கும் என்று கூறப்படுவதால், Hatchai Niyomdecha என் கனவில் வந்த பெரியவர் என்னை வறுமையில் இருந்து காப்பாற்ற வந்த தெய்வமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

இவர்களுக்கு இப்படி ஒரு முத்து கிடைத்திருக்கிறது என்பதை அறிந்த செல்வந்தர் ஒருவர் 25,000- பவுண்ட்க்கு வாங்க முன்வந்தார், ஆனால் குடும்பம் மறுத்துவிட்டது.

மற்றொரு தொடர்ச்சியாக ஆடம்பர பொருட்கள் சேகரிப்பாளர் உள்ளூர் மதிப்பில் மதி ஐந்து மில்லியன் பாட் கொடுக்க முன் வந்தார். குடும்பம் இன்னும் மறுத்துவிட்டது, அதற்கு பதிலாக அவர்கள் அதிக விலையை பெற முடியும் என்று நம்பி காத்து கொண்டிருக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker