
கனடாவில் ஸ்காபுரோவில் Finch Avenue East And Bridletowne Circle பகுதியில் நேற்றுமுன்தினம் நிகழ்ந்த தாக்குதலில் கொல்லப்பட்ட நபர் இலங்கை தமிழர் என ரொரண்ரோ பொலிஸார் உறுதிசெய்துள்ளனர்.
இரண்டு நபர்களின் கடுமையான தாக்குதலில் 58 வயதான கமலக்கண்ணன் அரசரட்ணம் உயிர் இழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஞயிற்றுக்கிழமை 3.40 மணியளவில் மோதல் தொடர்பான தகவல் ரொரண்ரோ பொலிஸாருக்கு கிடைக்கபெற்றுள்ளது. உடனடியாக அங்கு சென்ற பொலிஸார் ஆபத்தான நிலையில் இருந்த அவரை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல முயன்றபோதிலும் குறித்த நபர் உயிர் இழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிர் இழந்தவர் யாழ்ப்பாணம் கொக்குவிலை பிறப்பிடமாக கொண்டவர் என தெரியவருகின்றது.
மேலும் அந்த பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இரண்டு ஆண்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியதால் கடும் மோதலுக்கு இலக்காகி உயிர் இழந்துள்ளதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் ஒருவரை கைது செய்தபோதிலும் ஒருவர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ரொரண்ரோ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.