
கத்தார் மீதான தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தம்மிடம் ஏதும் தெரிவிக்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கத்தாரில் இடம்பெற்ற தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்பதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தது.
கத்தாரின் தோஹாவில் ஹமாஸ் அமைப்பின் தலைவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் முற்றிலும் எங்களின் சுதந்திரமான நடவடிக்கை என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இஸ்ரேல் தாக்குதல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறுகையில்,
இனி நெதன்யாகு கத்தாரை தாக்க போவது இல்லை எனவும் தோஹா நல்ல நட்புடன் இருந்து வருகிறது எனவும் பலருக்கு இது தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கட்டாரை தாக்குவதற்கு முன்னேரே இதுபற்றி அமெரிக்காவிடம் நெதன்யாகு தெரிவித்து விட்டார் என்று சர்வதேச முன்னணி ஊடகங்கள் தரப்பில் செய்திகள் வெளியிடப்பட்டு இருந்த நிலையில் , தாக்குதல் குறித்து இஸ்ரேல் எங்களிடம் தெரிவிக்கவில்லை எனவும் கத்தாரை நோக்கி தாக்குதலுக்காக ஏவப்பட்ட ஏவுகணைகள் வானில் பறந்து கொண்டிருந்த போதே தமக்கு தகவல் வந்ததாகவும் அமெரிக்க வெள்ளைமாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.