ஆலையடிவேம்பு
கதிர்காம பாதயாத்திரை பக்தர்களுக்கு அக்கரைப்பற்று, மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு….


இன்றைய தினம் (26) அக்கரைப்பற்று, மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் கதிர்காம பாதயாத்திரை செல்லும் பக்கதர்களுக்கு முக்கிய உலர் உணவுப்பொருட்களை அக்கரைப்பற்று 7/3 நாவலர் வீதியை சேர்ந்த குழந்தைவேல் நடராசா குடும்பத்தினர் வழங்கி இருந்தார்கள்.
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல் விழா கொடியேற்றத்தினை முன்னிட்டு இவ் வருடமும் கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை பயணத்தை பல பக்த அடியார்கள் முன்னெடுத்துள்ளனர்.
பாத யாத்திரை குழுவினர் கட்டம் கட்டமாக ஒவ்வொரு ஆலயங்களில் தங்கியும் ஆலயங்களை தரிசித்தும் கதிர்காமத்தை சென்றடைவர்.
அந்த வகையில் இன்றைய தினம் அக்கரைப்பற்று, மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தை வந்தடைந்த 100 பக்கதர்களுக்கு இவ் உலர் உணவுப்பொருட்கள் குழந்தைவேல் நடராசா குடும்பத்தினரால் வழங்கி வைக்கப்பட்டது.