இலங்கை
Trending

கதிர்காமத்தை சென்றடைந்த பாதயாத்திரிகள்!

(கனகராசா சரவணன்)

கதிர்காமத்துக்கான பாதயாத்திரிகள் 5 தினங்களாக காட்டுவழியாக மேற்கொண்டு நேற்று வியாழக்கிழமை (25) கதிகாமத்தை சென்றடைந்தனர்.

கதிர்காம முருகப் பெருமானுக்கு நேர்த்திகடன் வைத்து பாதையாத்திரை செல்லும் பகத்தர்கள் யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து சுமார் 850 கிலோமீற்றர் தூரம் சுமார் 45 நாட்கள் பாதையாத்திரையாக கதிர்காமத்தை சென்று சென்று நேத்திகடனை முடித்து ஆலயத்தை தரிசிப்பது வழமை.

இந்த வகையில் யாழ் செல்வச்சந்நிதி ஆலையத்தில் இருந்து கடந்த மாதம் ஆரம்பித்த பாதை யாத்திரை குழுவினர் கிழக்கு மாகாணம் பாணமை உகந்தமலை முருகன் ஆலயத்தை கடந்த 19 திகதி சென்றடைந்தனர்.

உகந்தையில் இருந்து கதிர்காமத்துக்கான காட்டுவழிபாதை கடந்த 20 திகதி வெள்ளிக்கிழமை சம்பிராய பூர்வமாக திறக்கப்பட்டு; 5 தினங்களாக காட்டுவழியாக ஊடாக ஆரயிக்கணக்காண பக்தர்கள் பாதயாத்திரிகளாக இன்று வியாழக்கிழமை (26) கதிர்காம முருகன் ஆலயத்தை சென்றடைந்தனர்

இதேவேளை காட்டுவழிபாதை எதிர்வரும் 4ம் திகதி பூட்டப்படும் என்பதுடன் காட்டுவழி பாதையில் பாதயாத்திரிகள் குடிப்பதற்காக தண்ணீர் இல்லாமல் பெரும் சிரமத்தை மேற்கொண்டதாகவும் இவ்வாறான நிலையில் ஒருபோதும் இடம்பெறவில்லை இவ் முறை இடம்பெற்றதாகவும் இதற்கு பொறுப்பான அதிகாரிகள் கவனம்செலுத்தத வேண்டும் என் பாதயாத்திரை பக்தர்கள் கடும் கவலை தெரிவித்தனர்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker