தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து சந்திக ஹதுருசிங்க நீக்கம்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து சந்திக ஹதுருசிங்க நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக இலங்கை அணியின் இடைக்கால பயிற்சியாளராக ஜெரோம் ஜெயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் என இலங்கை கிரிக்கெட் சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்திக ஹதுருசிங்கவினை பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக, இலங்கை கிரிக்கெட் சபை வேண்டுகோள் விடுத்திருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து சந்திக ஹதுருசிங்க நீக்கப்பட்டுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.
ஹதுருசிங்கவிற்கு இன்னும் 16 மாதங்கள் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட முடியும். எனினும், இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள் பதவி விலக வேண்டும் என இலங்கையின் விளையாட்டு அமைச்சர் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sri Lanka are scheduled to take part in a tri-nation, one-day international series in January against Zimbabwe and Bangladesh in Dhaka. / AFP PHOTO / ISHARA S. KODIKARA (Photo credit should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images)