கண்ணகிபுரம் திகோ/கண்ணகி வித்தியாலயத்தின் முகப்பு பெயருடன் கூடிய பிரதான நுழைவாயில் அமைக்கும் பணி மும்முரமாக முன்னெடுப்பு…

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச கண்ணகிபுரம் திகோ/கண்ணகி வித்தியாலயத்தின் முகப்பு பெயருடன் கூடிய பிரதான நுழைவாயில் அமைக்கும்பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சத்தியம் (வாழும் போதே வழங்கிடுவோம்) அமைப்பின் அனுசரணையில் பாடசாலை அதிபர் த.இராசநாதன் அவர்களின் ஏற்பாட்டில் முகப்பு பெயருடன் கூடிய பிரதான நுழைவாயில் அமைத்து பாடசாலையின் பௌதீக சூழலை அழகுபடுத்தும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
“சத்தியம் “ (லண்டன்) வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பின் ஸ்தாபகர் சத்தியமூர்த்தி அவர்கள் ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு கல்விசார்ந்து பல்வேறுபட்ட பல உதவிகளை தொடர்சியாக செய்து வருவதுடன்.
மேலும் குறித்த அமைப்பின் அடுத்த திட்டமாக ஆலையடிவேம்பு பிரதேச சின்னப் பனங்காடு பகுதியில் உள்ள மகாசக்தி அறநெறிப் பாடசாலை மாணவர்கள் மனமகிழ்வுடன் கற்பதனை ஊக்குவிக்கும் முகமாக பாடசாலையின் பௌதீக சூழலை அழகுபடுத்தும் வகையில் சுவர்களில் கல்வி சார்ந்த அழகிய ஓவியங்கள் வரைந்தும்.
மற்றும் மாணவர்களின் அறிவுத் திறன்களை மேன் மேலும் வளப்படுத்த நுட்பங்கள் சார்ந்த விளையாட்டுப்பொருட்களும் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறியக்கூடியதாகவும் உள்ளது.
கண்ணகிபுரம் திகோ/கண்ணகி வித்தியாலய பாடசாலையினை எடுத்துக்கொண்டால் பிரதேசத்தில் காணப்படும் அதிகஷ்ட பிரதேச பாடசாலையாக காணப்படுகின்ற போதிலும் தற்போது கல்வி சார்ந்து மற்றும் பௌதீகவள அபிவிருத்தி சார்ந்தும் வழந்துவரும் ஒரு பாடசாலையாக காணப்படுகின்றது.
பாடசாலையில் அமைக்கப்பட்டுவரும் முகப்பு பெயருடன் கூடிய பிரதான நுழைவாயில் அமைக்கும் வேலைகள் விரைவில் நிறைவடைந்து சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்று திகோ/கண்ணகி வித்தியாலய பாடசாலையின் பௌதீக சூழல் இவ் அமைப்பினால் ஏற்கனவே வரையப்பட்ட சுவர் ஓவியங்கள் மற்றும் பெயருடன் கூடிய பிரதான நுழைவாயில் போன்றவற்றால் மெருகூட்டுவதாக அமைய உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.