இலங்கை
கண்டியில் 14 வயது சிறுமிக்கு ஏற்பட்ட நிலை : ஏழு பேர் கைது!!

கண்டியில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 7 சந்தேக நபர்களை கண்டி – பூஜாபிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள ஏழு பேரும் கடந்த ஆறு மாதங்களில் குறித்த சிறுமியை பல முறை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
29 வயதான சந்தேகநபர் ஒருவர் ஆரம்பத்தில் குறித்த சிறுமிக்கு தொலைபேசி ஒன்றை பரிசளித்து தொடர்பு கொண்டதாகவும், பின்னர் தனது நண்பர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் தேடப்பட்டு வரும் நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.