அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு!

வி.சுகிர்தகுமார்
இதற்கமைவாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொலிசாருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.
அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யு.சி.பி.எம். விஜயதுங்க தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எச.எஸ்.பிரதீப்குமார கலந்து கொண்;டதுடன் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.அகிலன் கலந்து கொண்டு கொரோனா தொற்றுநோய் தொடர்பான விரிவான கருத்துக்களை வழங்கினார்.
அத்தோடு இத்தொற்று நோயிலிருந்து உத்தியோகத்தர்களை பாதுகாக்கும் முறைகள் தொடர்பிலும் விளக்கினார்.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அழைப்பின் பேரில் கலந்து கொண்ட அவர் இதுபோன்ற முகக்கவங்களை பாவனை செய்வது தொடர்பிலும் பொலிசார் பின்பற்ற வேண்டிய கொரொனா பாதுகாப்பு நடைமுறைகள் பற்றியும் குறிப்பிட்டார்.
மேலும் இக்கருத்தரங்குகளின் மூலம் உத்தியோகத்தர்கள் தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கூறினார்.
இக்கருத்தரங்கில் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
ஆகவே இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஏனைய அரச திணைக்களங்களும் இதுபோன்ற கருத்தரங்குகளை நடாத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து செயற்படவேண்டும் என இதன் மூலம் சுட்டிக்காட்டப்படுகின்றது.