ஒரே நாளில் 02 கிண்ணங்களை சுவிகரித்த அக்கரைப்பற்று சம்பியன்ஸ் விளையாட்டு கழகம்!!

அக்கரைப்பற்று சம்பியன்ஸ் விளையாட்டு கழகத்தினர் ஒரே நாளில் 02 கிண்ணங்களை சுவிகரித்து பெருமை சேர்த்துள்ளார்கள்.
தேற்றாதீவு உதயம் விளையாட்டுக்கழகம் நடாத்திய மின்னொளி கிரிகெட் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி அக்கரைப்பற்று சம்பியன்ஸ் விளையாட்டு கழகத்தை எதிர்த்து தேற்றாதீவு உதயம் விளையாட்டு கழகம் பலப்பரீட்சை நடாத்தி இரண்டாம் இடத்தை அக்கரைப்பற்று சம்பியன்ஸ் விளையாட்டு கழகம் பெற்றுக்கொண்டது.
மேலும் இன்றைய தினம் (30) களுவாஞ்சிகுடி உதயதாரகை கழகத்தினரினால் நடாத்தப்பட்ட கிரிகெட் சுற்றுத்தொடரின் காலிறுதி ஆட்டத்திற்காக பின் அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்து 4வது கிண்ணத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.
திறம்பட விளையாடி ஒரே நாளில் இரண்டு கிண்ணங்களை பெற்று பெருமைசேர்த்த சம்பியன்ஸ் விளையாட்டு கழகத்தினருக்கும் விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துக்கள்.
மேலும் அணியின் புதிய தலைவரான ஜெனிஸ்ரன் அவர்கள் அணியினை சிறப்பான பாதையில் வழிநடத்தி தொடர் வெற்றிகளை பெற்று கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.