இலங்கை

2019 ஜனாதிபதி தேர்தல்: வாக்குப்பதிவுகளின் இறுதி விபரம் இதோ!

இலங்கை சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலுக்கான வாக்களிப்புகள் நாடளாவிய ரீதியாக சுமுகமாக இடம்பெற்றது.

தேர்தலுக்கான வாக்களிப்புகள் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், மாலை 5 மணிவரை இடம்பெற்றது.

அந்தவகையில் நாடளாவிய ரீதியாக இன்று 80 விகித வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இறுதி நிலவரம்,

  • யாழ்ப்பாணம் – 66.5%
  • ஹம்பாந்தோட்டை – 81%
  • வவுனியா – 75.12%
  • பதுளை – 80%
  • அம்பாறை – 80%
  • மொனராகலை – 80%
  • இரத்தினபுரி – 84%
  • முல்லைத்தீவு – 76.2%
  • கிளிநொச்சி – 73%
  • மன்னார் – 71.7%
  • மட்டக்களப்பு – 75%
  • திருகோணமலை – 83%
  • நுவரெலியா – 80%
  • கொழும்பு – 75%
  • களுத்துறை – 80%
  • மாத்தறை -79%
  • காலி -80%
  • புத்தளம் -74%
  • அநுராதபுரம் -75%
  • கேகாலை-75%
  • கம்பஹா-81%
  • குருநாகல் – 82%
  • மாத்தளை – 79%
  • கண்டி – 80%
  • பொலனறுவை -79%

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker