ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழாவின் பாற்குடபவனி

அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழா (29) ஞாயிற்றுக்கிழமை அம்மனின் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி பூசைகள் கோலாகலமாக இடம்பெற்றுவருகின்ற நிலையில்.
இன்றைய தினம் (03) வியாழக்கிழமை அக்கரைப்பற்று வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து நுற்றுக்கணக்கான பக்த அடியார்கள் பாற்குடபவனி வீதிவழியே வந்து ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலயத்தை வந்தடைந்து பூசைகளும் இடம்பெற்றது.
நாளைய தினம் (04) வெள்ளிக்கிழமை அம்மன் ஆலய உள்வீதி உலா நிகழ்வு இடம்பெற இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.