ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் ”நான்கு லட்சம்” பெறுமதியான உலர் உணவுப்பொதி, 400 குடும்பங்களுக்கு பயன்: ஏனைய ஆலைய பரிபாலன சபைகள் எங்கே???

ம.கிரிசாந்
படங்கள்: ரா.அபிராஜ்
இலங்கையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தினக்கூலிக்கு வேலைக்கு செல்லும் குடும்பங்களில் உணவுத் தேவை மேலும் அதிகரித்துள்ளது. இதனை நிவர்த்தி செய்ய உலர் உணவுப் பொதிகள் எமது ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கு பல அமைப்புக்களால் இக் காலகட்டத்தில் வழங்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய நிதியில் இருந்து ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (03) வெள்ளிக்கிழமை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இருந்து தெரிவு செய்யப்பட 400 குடும்பங்களுக்கு 400,000/- (நான்கு லட்சம்) பெறுமதியான உலர் உணவுப்பொருற்கள் தல 1000/- வீதம் பயனாளர்களுக்கு வழங்கி வைத்தனர்.
ஆலய பரிபாலன சபையினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இப்பணியில் ஆலய பரிபாலன சபையினர், பயனாளர்கள் மற்றும் பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம சேவக உத்தியோகத்தர்கள் என்பவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் ஒரு பகுதி பயனாளர்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று அவர்கள் நிவாரணப்பொருட்கள் கையளிக்கப்பட்டது.
இதனைப்போன்றே அக்கரைப்பற்று பெரியபிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் 50 குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்று ஸ்ரீ பெரியபிள்ளையார் ஆலய , ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பரிபாலன சபையினரினால் மேற்கொள்ளப்பட்ட மகத்தான செயற்பாடுகள் போன்று.
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் காணப்படும் ஏனைய ஆலைய நிர்வாகத்தினரும் திருவிழா காலங்களில் யார் பெரியவர்கள் என கட்டிக்கொள்வதற்காக மக்கள் பணத்தினை கொண்டு போட்டிக்கு திருவிழா நடத்தும் ஆலய நிர்வாகத்தினர்களும் இது போன்ற நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என மக்களின் பரவலான எதிர் பார்ப்பாகவும் கோரிக்கையாகவும் காணப்படுகின்றது.
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட 22 ஆலையங்கள் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.