இலங்கை
தேர்தலுக்கு பின்னரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஐ.தே.க. நடவடிக்கை

தேர்தலுக்கு பின்னர் இடம்பெற்ற அனைத்து வன்முறை சம்பவங்கள் தொடர்பாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயகத்துக்கு அறிவிக்குமாறு கட்சியின் ஆதரவாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி ஆதரவாளர்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டு குறுகிய காலத்தில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்றுள்ள வன்முறைச் சம்பவங்கள் ஏமாற்றத்தை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2015 தேர்தலைத் தொடர்ந்து நாட்டில் நிறுவப்பட்ட அமைதியான, நியாயமான, அகிம்சை சூழலைப் பேணுவதற்கு பொறுப்பான அதிகாரிகள் தமது கடமைகளை உரிய வகையில் செயற்படுத்த தவறியமை வருந்தத்தக்கது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.