இலங்கை
மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின்சாரம் துண்டிக்கப்படுமா? அமைச்சர் வெளியிட்ட தகவல்!!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் மின்சாரம் துண்டிக்கப்படானதென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். மின்சார கட்டணம் செலுத்த தாமதமானாலும் மின்சாரம் துண்டிக்கடாதென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் மின்சார கட்டணம் செலுத்த கூடிய வாடிக்கையாளர்கள் தாமதமின்றி மின்சார கட்டணத்தை செலுத்துமாறு அமைச்சர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மின்சார கட்டணம் செலுத்த கூடிய வசதி உள்ளவர்கள் உட்பட அதனை செலுத்தாமல் இருப்பதனை அவதானிக்க முடிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.