ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரால் நடாத்தப்பட்ட சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை நிகழ்வு…..

சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை நிகழ்வானது இன்று ஞாயிற்றுக்கிழமை மு.ப 9.30 மணியளவில் அக்கரைப்பற்று, கோளாவில் விநாயகர் மகாவித்தியாலத்தில் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற தலைவர் திரு.வே.சந்திரசேகரம் அவர்களின் தலைமையில் மிகவும் சிறந்தமுறையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வின் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு.கு.ஜெயராஜ் அவர்களும் மேலும் பல கௌரவ அதிதிகள், பிரதேச ஆலயத்தலைவர்கள் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கோளாவில் விநாயகர் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் என்பவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
நிகழ்வுகளாக குருபூசை நிகழ்வு, மங்கலவிளக்கேற்றல், நந்திக் கொடியேற்றல், இறைவணக்கம், அறநெறி கீதம், தலைமை உரை,அதிதிகள் உரை, கலைகலாச்சர நிகழ்வுகள், பரிசளிப்புக்கள் மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகள் என்பனவும் சிறந்த முறையில் இடம்பெற்றது.
சைவசமய குரவர் நால்வரிலே சுந்தரமூர்த்தி நாயனார் மற்றைய மூவரினும் பெரிதும் வேறுபட்ட வாழ்வினர் ஆவார். அவர் விண்ணுலக வாழ்வு ஆகிய திருக்கயிலைந்தொண்டு வாழ்விலே காக்க வேண்டிய மனத்தூய்மையை இடிந்த குற்றத்தின் விளைவை அனுபவித்ததற்காக மண்ணுலக வாழ்க்கையை ஏற்ற ஒருவராவார்.