தமிழரின் பிரச்சினை – ஜனாதிபதியுடன் கூட்டமைப்பின் பேச்சுக்கே அவசியமில்லை என்கின்றார் தயாசிறி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் அழுத்தம் பிரயோகிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலமையகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், தமிழர்களின் பிரச்சினை குறித்து கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தேவையே கிடையாது என கூறியுள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து ஆராய்வதற்கு கட்சியில் 12 உறுப்பினர்களை கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது என்றும் கடந்த காலத்தில் முரண்பட்டபோதும் இனிவரும் காலங்களில் முரண்பாடற்ற சிறுபான்மை கட்சி உறுப்பினர்களுடன் இணக்கமாகவே செயற்படுவோம் என்றும் தயாசிறி ஜயசேகரகுறிப்பிட்டுள்ளார்.
எனவே புதிய அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வு எத்திரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத விதத்தில் வழங்கப்படும் என்றும் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சுமந்திரன் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க வேண்டிய தேவை கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.