கொரியாவில் தொழிலை எதிர்பார்த்து உள்ளவர்களுக்கான அறிவித்தல்

கொரியா தொழிலுக்கு தகுதி பெற்றுள்ள இந்நாட்டு இளைஞர் யுவதிகளுக்கு அந்நாட்டுக்கு செல்வதற்கு தேவையான வசதிகளை உடனடியாக செய்துத் தருவதாக இலங்கைக்கான கொரியத் தூதுவர் வொன்ஜின் ஜியேன் (Woonjin Jeong) வௌிவிவகார அமைச்சருக்கு தெரிவித்துள்ளார்.
கொரியா தொழிலுக்காக தகுதி பெற்றுள்ள இளைஞர்கள் முகங்கொடுத்துள்ள தாமதம் தொடர்பில் வௌிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் நேற்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலில் அந்நாடடு தூதுவர் இதனை தெரிவித்துள்ளார்.
வௌிவிவகார அமைச்சில் குறித்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
கொரியா தொழிலுக்காக தகுதி பெற்றுள்ள நபர்கள் நீண்ட காலமாக அங்கு தொழிலுக்காக செல்ல எதிர்ப்பார்ப்புடன் உள்ள போதும், கொவிட் தொற்று நிலைமை காரணமாக அது நாளுக்கு நாள் தள்ளிச் செல்வதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன இதன்போது தெரிவித்தார்.
இதன் காரணமாக அவர்கள் கடுமையான மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதன்போது, கொரிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தௌிவு படுத்திய கொரிய தூதுவர், கொரிய தொழிலுக்கு தகுதி பெற்றுள்ள அனைவருக்கும் குறித்த தொழில்வாய்ப்பை பெற்றுக் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கொவிட் தொற்று நிலைமை காரணமாக இதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், முதல் சந்தர்ப்பத்திலேயே அவர்கள் அனைவரையும் அனுப்பி வைக்க எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.