இலங்கை
பலத்த காற்றுடன் கூடிய மழையினால் அக்கரைப்பற்றில் தொலைத்தொடர்பு கோபுரம் குடைசாய்ந்தது…

பலத்த காற்றுடன் கூடிய மழையினால் அக்கரைப்பற்று டீன்ஸ் வீதி, அல்-பாத்திமிய்யா வித்தியாலயத்திற்கு அருகாமையில் மக்கள் குடியிருப்புப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த தனியார் தொலைத்தொடர்பு கோபுரம் குடைசாய்ந்து விழுந்துள்ளது.
இறைவனின் அருளால் அருகில் யாருமில்லை, அருகில் இருந்த வீடுகளுக்கு மட்டுமே சில சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த கோபுரம் அமைக்கும் போது அப்பகுதி மக்களின் பலத்த எதிர்ப்பையும் மீறி பலவந்தமாகவே அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.