ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழாவின் தீமிதித்தல் நிகழ்வு பக்த அடியார்கள் சூழ……

அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார சக்தி திருப்பெருவிழா நிகழாண்டு 2024 (03.10.2024) புதன்கிழமை காலை சுபவேளையில் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி தொடர்ந்தும் உற்சவ நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றது.
அந்த வகையில் இன்று (12.10.2024) சனிக்கிழமை ஸ்ரீ வீரமாகாளி அம்பாள் ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வின் தீமிதித்தல் நிகழ்வு பலநுற்றுக்கணக்கான பக்த அடியார்கள் சூழ உற்சவ நிகழ்வுகள் சிறப்பானதாக இடம்பெற்றது.
மேலும் குறித்த ஆலயத்தின் எட்டாம் சடங்கு (18.10.2024) அன்றும் இடம்பெறுவதுடன் உட்சவ நிகழ்வுகள் அன்றைய தினம் நிறைவடையவும் இருக்கின்றது.