இலங்கை

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் டிஜிட்டல் எக்ஸ்ரே ((Digital X-ray ) தொழிநுட்ப வசதி பிரிவு திறப்பு…

வி.சுகிர்தகுமார்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் நீண்டகால தேவையான டிஜிட்டல் எக்ஸ்ரே ( (Digital X-ray  ) தொழிநுட்ப வசதி பிரிவு உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஐ.எம்.ஜவா ஹிர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ரேடியோலொஜிஸ்ட் வைத்திய நிபுணர் வைத்தியர் ஹிதாயா தாஜூடீன்  சிரேஸ்ட கதிரியக்கவியலாளர் ரகுமதுல்லா ஆகியோர் கலந்து கொண்டு டிஜிட்டல் எக்ஸ்ரே ( (Digital X-ray  ) தொழிநுட்ப வசதி பிரிவினை திறந்து வைத்தனர்.

நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தொழிநுட்பவியலாளர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என கலந்து கொண்டனர்.

டிஜிட்டல் எக்ஸ்ரே ( (Digital X-ray  ) தொழிநுட்ப வசதி மூலம் நோயாளர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மேம்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker