இலங்கை
13 தங்கப் பதக்கங்களை சுவீகரித்த மாணவி தணிகாசலம் தர்ஷிகா அவர்களுக்கு பா. உ கலையரசன் வாழ்த்து….

கொழும்பு பல்கலைக்கழகத்தின் MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று அம்பாறை மாவட்ட அக்கறைபற்றினை சேர்ந்த தணிகாசலம் தர்ஷிகா என்ற மாணவி சாதனை படைத்துள்ளார்.
குறித்த மாணவிக்கு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றார்.
குறித்த வாழ்த்து செய்தியில் சிறந்த மருத்துவ பீட மாணவ விருது உள்ளடங்களாக 13 தங்கப்பதக்கங்களை பெற்று எமது அம்பாறை மாவட்டத்திற்கும் அனைத்து தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துதந்த கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி தங்கை தணிகாசலம் தர்ஷிகா அவர்கள் எதிர்வரும் காலங்களிலும் பல சாதனைகளை புரிந்து உயந்த நிலையை அடைந்திட எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் என தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அவர்கள்.