இலங்கை
அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தொகையினை கணக்கிடும் நடவடிக்கைகள் ஆரம்பம்

நாட்டின் கையிருப்பிலுள்ள, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தொகையினை கணக்கிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சந்தை, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.
இந்தக் கணக்கெடுப்பு நிறைவடைந்ததன் பின்னர், நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட வேண்டிய அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் தொகை குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் குறித்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், எதிர்காலத்தில் முகங்கொடுக்க வேண்டியுள்ள உணவு நெருக்கடிக்கு தயார்ப்படுத்தல் மற்றும் திட்டமிடல் என்பன குறித்து, ஜனாதிபதியுடன் எதிர்வரும் 2ஆம் திகதி விசேட கலந்துரையாடல் நடத்த உள்ளதாகவும் சந்தை, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.