கொவிட் 19 வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆராயும் முன்னாயத்த கலந்துரையாடல் திருக்கோவில் பிரதேச செயலகத்தில்

வி.சுகிர்தகுமார்
.
பொது மக்கள் வீட்டில் இருந்து வெளியேறும் போது முகக்கவசம் அணிதல், மக்கள் கூட்டமாக நிற்பதை தவிர் த் தல், மற்றும் வெளிச்சூழலில் இருந்து வீட்டுக்கு சென்றவுடன் கைகளை சவர்க்காரம் அல்லது சுத்தம் செய்யும் பதார்த்தங்களை இட்டு கைகளை கழுவுதல், வேலை இல்லா நேரங்களில் அநாவசியமாக வெளியில் வருவதை தடுத்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட தீர்மானங்கள் கலந்துரையாடலில் எடுக்கப்பட்டது.மேலும் இவ் விடயங்களை கடைப்பிடிப்பதால் தொற்றில் இருந்து நாம் பாதுகாப்பு பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்தாரன், திருக்கோவில் பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் மு.சதிசேகரன் பிரதேச சபை தவிசாளர் கமலராஜன் மற்றும் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் அ.அனோஜா நிருவாக உத்தியோகத்தர் த.கணேஷ்ராஜா நிருவாக கிராம உத்தியோகத்தர் எஸ்.பரிமளவாணி, சிரேஷ்ட கிராம உத்தியோகத்தர் கன இராஜரெட்ணம், திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயவீர ,திருக்கோவில் காஞ்சிரங்குடா 242ஆம் இராணுவ முகாம் கட்டளைதளபதி டிஷாநாயக்கா திருக்கோவில் வைத்தியசாலை அதியட்சகர் ஏ.பி.மஸ்ஹத் திருக்கோவில் விசேட அதிரடிப்படை கட்டளைத் தளபதி , திருக்கோவில் பொது சுகாதாரவைத்திய அதிகாரிகள் மற்றும் அக்கரைபற்று தெற்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்கப் பொது முகாமையாளர் இ.மகேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருத்துக்களை எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பில் ஆராய்ந்தனர்.