இலங்கை
அக்கரைப்பற்று HNB வங்கி கிளையில் உலக சுற்றாடல் தின நிகழ்வு….

உலக சுற்றாடல் வாரத்தின் இறுதி நாளான இன்று (05.06.2024) அக்கரைப்பற்று HNB வங்கி கிளையில் சுற்றாடல் தின நிகழ்வு வங்கி கிளையின் முகாமையாளர் A.ரியாசுதீன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிராந்திய முகாமையாளர் செ.சத்தியசீலன் கலந்து கொண்டிருந்ததுடன் வங்கி உத்தியோகத்தர்கள் வாடிக்கையாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தெரிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நிகழ்வின் நிறைவாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டு நிகழ்வானது நிறைவு பெற்றது.