ஆலையடிவேம்பு
வரலாற்று சிறப்புமிக்க கோளாவில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் பாற்குடபவனி…

R. அபிராஜ் , V. ஜினுஜன்
கிழக்கிலங்கை அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச வரலாற்று சிறப்புமிக்க கோளாவில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் மூன்றாம் நாளாகிய இன்று (03) மு.ப 9.00 மணியளவில் பாற்குடபவனி இடம்பெற்றது.
பாற்குடபவனி ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் தேவஸ்தான ஆலயத்தில் இருந்து இந்து சமய ஆசார முறைப்படி கோளாவில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தை சென்றடைந்து பின் அம்பளிற்கான பாலாவிசேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
நாட்டில் நிலவும் கொரோனா தொடர்வன அசாதாரண சூழ்நிலை முற்றாக வழமைக்கு திரும்பாத நிலையில் ஆலய நிர்வாகத்தினரினால் பல முன்னேற்பாடுகளுடன் மேற்படி பாற்குடபவானியானது சிறப்பாக இடம்பெற்றது முடிந்தது.