ஆலையடிவேம்பு
இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் தேர்ச்சி பெறுபேறுகளை அடைய வேண்டி ஆலையடிவேம்பு ஶ்ரீ முருகன் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை…

இம்முறை 2022 ஆம் ஆண்டிற்கான தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் பரீட்சையில் சிறந்த தேர்ச்சி பெறுபேறுகளை அடைய வேண்டி ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் ஆலயத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (2022.12.18) காலை 07.30 மணியளவில் சிறப்பு பூஜை இடம்பெற ஆலய நிர்வாக சபையினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
பிரதேச தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் கலந்து கொண்டு இறை ஆசியை பெற்றுக்கொள்ளுமாறு அழைக்கின்றார்கள் ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் ஆலய நிர்வாக சபையினர்.
மேலும் குறித்த சிறப்பு பூஜையினை ஆலய குரு சி.சஜிப் சர்மா அவர்கள் மேற்கொள்ள உள்ளார்.