உலகம்
Trending

உலகில் முதன் முறையாக 10G இணைய சேவையை அறிமுகம் செய்யும் சீனா

உலகில் முதல் நாடாக 10G இணைய சேவையை சீனா அறிமுகம் செய்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும் நாடான சீனாவின் ஹுபே மாகாணத்தில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இச் சேவையை ஹவாய் மற்றும் சீனா யூனிகாம் இணைந்து செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. அந்தவகையில் ஹுபே மாகாணம், சுனான் கவுண்டியில் கொண்டுவரப்பட்டுள்ள 10G இணைய சேவை மூலம் 2 மணிநேரப் படத்தை சில விநாடிகளில் பதிவிறக்கம் செய்ய முடியும் எனவும், 9,834 எம்பிபிஎஸ் File ஐ 3 மில்லி நொடிகளில் பதிவிறக்கம் செய்யவும், 1,008 எம்.பி.பி.எஸ் வேகத்தில் பதிவேற்றம் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10G இணைய சேவையானது அதிநவீன 50G பேசிவ் ஆப்டிகல் நெட்வொர்க் (Passive Optical Network) தொழில்நுட்பம் மூலம் இயக்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக, கட்டாரின் அர்-ரயான் மீடியன் நகரத்தில் 618.53 எம்பிபிஎஸ் (6.8ஜி) வேகத்தில் பதிவிறக்கம் செய்வதே அதிகபட்ச வேகமாக இருந்தது. மேலும், அபிதாபில் கடந்த மாதம் 355 எம்பிபிஎஸ் வேக Broadband ஐ அறிமுகம் செய்திருந்தனர்.

இந்த நிலையில், சீனாவில் மற்ற மாகாணங்களிலும் விரைவில் 10G இணைய சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker